பேரிடர் மேலாண்மை முதன்மை பொறுப்பாளர்களுக்கு குறுவட்ட அளவிலான பயிற்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 2 June 2022

பேரிடர் மேலாண்மை முதன்மை பொறுப்பாளர்களுக்கு குறுவட்ட அளவிலான பயிற்சி

பேரிடர் மேலாண்மை முதன்மை பொறுப்பாளர்களுக்கு குறுவட்ட அளவிலான பயிற்சி

பேரிடர் மேலாண்மை முதன்மை பேரிடர் மீட்பளர்களுக்கன, குறுவட்ட அளவிலான பயிற்சி, கடலூர் வட்டம் குடிகாடு புயல் பாதுகாப்பு மையத்தில் நடந்தது. கடலூர் மாவட்டத்தில் பேரிடரின்போது, அதிகம் பாதிக்கப்படும் பகுதிகளாக, 278 பகுதிகள், வருவாய்த் துறையினரின் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த பேரிடரின்போது, பொது மக்களை எவ்வாறு பாதுகாக்க வேண்டும், அவர்களை பாதுகாப்பு மையங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது, உணவு அளிப்பது, மேலும் பேரிடர் காலங்களில் வதந்தி பரவாமல் பார்த்துக் கொள்வது, என்பது குறித்தும், டிஎன் ஸ்மார்ட் என்ற மொபைல் ஆப் பை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் வரும் செய்திகளை பொது மக்களிடம் பகிர்ந்து கொள்வது, ஆகியவை குறித்து முதன்மை பொறுப்பாளர்களுக்கான, குறுவட்ட அளவிலான பயிற்சி குடிகாடு கிராமத்தில் நடந்தது. 


இந்த பயிற்சியை கடலூர் தாசில்தார், பூபாலச்சந்திரன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் தே.வீரபாகு பயிற்சி அளித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருவாய் ஆய்வாளர் ஏ.உதயச்சந்திரன் செய்திருந்தார். இந்தப் பயிற்சியில், மஞ்சக்குப்பம் குறுவட்டத்தை சேர்ந்த சுமார் 33 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.

No comments:

Post a Comment

*/