கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோ.பவழங்குடி ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் குணசேகரன் தலைமை தாங்கினார். நாகராஜ் வரவேற்றார். பின்னர் முதல் பரிசு பெற்ற மாணவி ஜனனிக்கு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி வெங்கடேசனும் இரண்டாம் பரிசு பெற்ற மாணவி அனிதாவுக்கு முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராமச்சந்திரன் மூன்றாம் பரிசு பெற்ற மாணவி அட்சயா வுக்கு வழக்கறிஞர் அகிலன் அவர்களும் பரிசுகளை வழங்கினார்.
ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு கல்வியாளர் பழனிவேல் அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சிக்கு தனிப் பயிற்சி பள்ளி ஆசிரியர் சிவராமன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சீதா மணிகண்டன், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் மணிகண்டன் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் அர்ச்சனா ராஜாராமன், ஆகியோர் முன்னிலை வகித்தனர் தலைமை ஆசிரியர் எழில் ராணி மற்றும் ஆசிரியப் பெருமக்களும் ஏற்புரை ஆற்றினார்.
இறுதியில் பட்டதாரி ஆசிரியர் வீர வடிவேல் அவர்கள் நன்றியுரை கூறினார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சியில் பேசிய ஆசிரியர்கள் மற்றும் விழா ஏற்பாட்டாளர்கள் 100% தேர்ச்சி பெற்ற இந்த அரசு பள்ளிக்கு அரசு உரிய கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment