கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள தலைகுளம் கிராமத்தில் 81அடி உயர அருள்மிகு ஸ்ரீ மகா வெட்காளி அம்மனுக்கு 24 ஆம் ஆண்டு தீமிதி , மயானக்கொள்ளை, திருக்கல்யாண வைபவம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. 01.06.2022 முதல் 06.06 2022 வரையில் 6 நாட்கள் தொடர் திருவிழாவாக நடைபெற உள்ள இந்த திருவிழாவின் முதல் நாளான நேற்று 01.06.2022 புதன்கிழமை காலை 10:30 மணி அளவில் விநாயகர் பூஜையுடன் தொடங்கி காப்புகட்டி கொடியேற்றி திருவிழா இனிதே துவக்கம் ஆனது பின்னர் இரவு 7 மணி அளவில் அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது.
இதனை தொடர்ந்து 02.06 2022 வியாழன் இன்று மாலை 6 மணி அளவில் முதல்கால சண்டியாகம் நடைபெற இருக்கின்றது. அதனை தொடர்ந்து 03.06. 2022 வெள்ளிகிழமை காலை 6 மணி அளவில் இரண்டாம் கால சண்டி யாகம் 13 பட்டுப்புடவை வேலியில் செலுத்துதல் பகல் 2 மணி அளவில் பக்தர்கள் பால்குடம் பறக்கும் காவடி செடல் போன்ற பல்வேறு நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்த உள்ளனர். அதைத் தொடர்ந்து மாலை 4 மணி அளவில் பாலாபிஷேகமும், 21 அடி நீளமுள்ள அலகுசாத்தி 54 அடி நீளமுள்ள தீக்குழியில் பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்வும் இரவு 8 மணியளவில் சிறப்பு நிகழ்ச்சியும் இதனை தொடர்ந்து 04.06.2022 சனிக்கிழமை காலை 9 மணிக்கு மேல் அம்மன் குறத்தி வேடம் அணிந்து வீதியில் குறி சொல்லுதல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
மாலை 3 மணி அளவில் அம்மன் விஸ்வரூபம் கொண்டு நீசாசனி உடல் கிழித்து மயானக்கொள்ளையிடுதல் நிகழ்ச்சியும் 04.06. 22 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி அளவில் ஸ்ரீ தாண்டவராய சுவாமி அங்காளபரமேஸ்வரி திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது அதனை தொடர்ந்து திருவிளக்கு பூஜை மகா தீபாராதனை காண்பித்து கல்யாண விருந்து பக்தர்களுக்கு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
அதனை தொடர்ந்து இறுதி நாளான 06.06.22 திங்கள்கிழமை காலை 9 மணிக்கு மஞ்சள் நீராட்டு விளையாட்டு மற்றும் வீதிஉலா காட்சி அதை தொடர்ந்து காப்பு கலைதளுடன் விழா இனிதே நிறைவுற இருக்கின்றது திருவிழாவையொட்டி சுற்றுவட்டார வெளியூர் வெளிமாநில பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு மகா வெட்காளி அம்மன் அருளை பெற்றுச் செல்ல ஆலய நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்படுகிறது ஆலயகுருஜி சிவகுமார் சுவாமி இத்திருவிழாவை தலைமைதாங்கி நடத்த உள்ளார்.


No comments:
Post a Comment