புவனகிரி அருகே இறந்தவரின் உடலுடன் தண்ணீரில் மிதந்த உறவினர்கள்!!!
கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் மருதூர் கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வரும் நிலையில் தலைமுறை தலைமுறையாக தச்சு வேலை செய்யும் 50.க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்குச் சொந்தமான இடுகாட்டிற்கு செல்வதற்கு பல தலைமுறையாக பாலம் இல்லாததால் நத்தமேடு வாய்க்காலில் இறந்தவரின் பிரேதத்தை சுமந்து தண்ணீரில் நீந்து இறங்கி செல்லும்அவல நிலை தொடர்கதையாகி வருகிறது.
மேலும் இவ் வாய்க்காலில் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இருந்து வெளியேற்றும் நீரானது இந்த வாய்க்காலில் எந்த நேரமும் வந்து கொண்டே இருக்கும் மழை மற்றும் வெள்ள காலங்களிலும் வாய்க்காலில் கழுத்து அளவிற்கு தண்ணீர் செல்வதால் இறந்தவரின் உடலை உறவினர்கள் உயிரைப் பணயம் வைத்து சுமந்து சென்று அடக்கம் செய்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று மருதூர் கிராமத்தில் கந்தவேல் வயது 50 .என்ற நபர் உடல்நலக்குறைவால் காலமானார் அவரது பிரேதத்தை நத்தமேடு வாய்க்கால் வழியாக உறவினர்கள் இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
இந்நிலையில் இடுகாட்டுக்கு செல்வதற்கு பாலம் அமைத்து தரக்கோரி பல முறை மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் உறவினர்கள் மற்றும் பொது மக்கள் மாவட்ட நிர்வாகம் விரைந்து சுடுகாட்டுக்குச் செல்லும் பாதையை சீரமைத்து பாலம் கட்டித் தர வேண்டும் என்று உறவினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்


No comments:
Post a Comment