கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் முப்பெரும் விழா நகர அனைத்து வர்த்தகர்கள் நலச்சங்க தலைவர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் மாநில தலைவர் விக்கிரமராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது புதியதாக பொறுப்பேற்ற நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து பேசுகையில் ஒவ்வொரு பிரச்சினையும் எதிர் கொள்கின்ற பொழுது சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும், அரசுத்துறை அதிகாரிகள், குறிப்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எல்லாரும் வருவார்கள், சோதனை செய்வார்கள் நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும், தவறான அதிகாரிகள் கையூட்டு பணம் பெறுகின்றவர்கள் நம்முடைய உழைப்பை சுரண்டி எடுத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணுகிற அதிகாரிகள் இந்த மேடை மூலமாக இந்த விழாவின் மூலமாக அவர்களை எச்சரிக்கையாக நான் கேட்டுக்கொள்கிறேன். கையூட்டு பணம் பெறுவதை, வியாபாரிகளை மிரட்டி லஞ்சம் வாங்குவதை, இந்த தேதியில் இருந்து விருத்தாசலத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும், அப்படி நிறுத்த முடியாத அதிகாரிகளாக இருப்பார்களானால் அவர்கள் இருக்க வேண்டிய இடம் ஜெயிலாகத்தான் இருக்குமே தவிர வேறு எங்கும் அது போன்ற அதிகாரிகள் இருக்க முடியாது. நிறைய அதிகாரிகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம், குறிப்பாக பட்டியலையும் தயார் செய்து கொண்டு இருக்கிறோம், எந்தந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு சம்பளம், எந்தந்த அதிகாரிகளுக்கு எவ்வளவு சொத்து மதிப்பு இருக்கிறது என்று கூறினார்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முக்கியமாக விக்ரமராஜா கூறுகையில் விருத்தாசலத்தை மாவட்டமாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரைவாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்துகிறோம், விருத்தாச்சலம் பெரிய அருள்மிகு விருத்தகிரீஸ்வரர்) கோயிலை ஒரு சுற்றுலாத் தலமாக அறிவிக்க வேண்டும் என்பதை தெரிவித்து வலியுறுத்துகிறோம், இங்கே பிள்ளைகள் படிப்பதற்கு போதிய இடங்கள் இல்லாமல் இடர்பாடுகளை சந்தித்து வருகிறார்கள்.. மகளிர் கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்துகிறோம், வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு முதலமைச்சர் அவர்கள் தீர்வு கண்டு கொண்டிருக்கிறார்கள், இன்று வணிக நல வாரியம், காவல்துறை தனி செயலி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்துக் கொண்டு இருக்கிறார், இவருக்கு தமிழ்நாடு வணிக அமைப்பு பேரவையின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று, உள்ளாட்சி, அறநிலையத்துறை கடைகள், மாநகராட்சி கடைகள், அனைத்து வாடகை கடையில் சீர்படுத்துவதற்கு கமிட்டி அமைப்பதாக உறுதியளித்து கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது, விரைவாக நடவடிக்கை எடுத்து, சீரான வாடகை விகிதத்தை தரப்பட வேண்டும் என்கிற தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றி வலியுறுத்துவதாக தெரிவித்தார். இவ்விழாவில், விருத்தாச்சலம் நகர வர்த்தகர்கள் நலச் சங்கத்தைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். விருத்தாசலம் வணிக பேரவையின் புதிய தலைவராக கோபு. செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் முகமது ஆகியோர் பதவி ஏற்று கொண்டனர்.

No comments:
Post a Comment