புவனகிரி அருகே ஜெயங்கொண்டான் கிராமத்தில் அரசு மதுபான கடை மர்மநபர்களால் உடைப்பு போலீஸ் வலைவீச்சு !!
கடலூர் மாவட்டம் புவனகிரி வட்டம் ஜெயங்கொண்டான் கிராமத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு அரசு டாஸ்மார்க் மதுபான கடை எண் 2509 உள்ளன டாஸ்மார்க் கடையில் பணிபுரியும் ஊழியர்கள் வழக்கம்போல் நேற்று 27/06/2022 விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்களின் கணக்கு சரிபார்க்கப்பட்டு மீதமுள்ள 12 லட்சம் மது பாட்டில்களை கடையின் உள்ளே வைத்து விட்டு இரவு 10 மணி அளவில்கடையை பூட்டிவிட்டு விற்பனை செய்யப்பட்ட தொகையினை வழக்கம்போல் எடுத்துச் சென்றுள்ளனர்
இந்த நிலையில் நேற்று இரவு பூட்டியிருந்த டாஸ்மாக் கடையின் வெளிப்புறத்தில் உள்ள இரும்பு ஷெட்டர் மற்றும் பூட்டுகளை மர்ம நபர்கள்உடைத்து உள்ளே சென்று உள்ளனர் அப்போது கடையின் உள்ளே இயங்கிக் கொண்டிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து திருட முயன்ற மர்ம நபர்கள் தப்பித்துச் சென்றனர் அதிகாலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் டாஸ்மார்க் கடை உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக மருதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மருதூர் போலீசார் டாஸ்மாக் கடையின் ஊழியர்களை வரவைத்து கடையின் உள்ளே சென்று முதல்கட்ட விசாரணை செய்தனர் அப்போது கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 12 லட்சம் மது பாட்டில்கள் உள்ளது தெரியவந்துள்ளது டாஸ்மாக் கடையின் உள்ளே சிசிடிவி கேமரா இருந்ததனால் மர்ம ஆசாமிகள் திருடாமல் தப்பித்துச் சென்று விட்டனர் திருட்டு ஏதும் நடக்கவில்லைஎன்று தெரிவித்தனர் இச்சம்பவம் குறித்து மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாஸ்மாக் கடையின் ஷட்டரை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்இச்சம்பவத்தால் அப்பகுதியில் பொதுமக்களிடையே சிறிது நேரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
No comments:
Post a Comment