பெருமாள் ஏரி கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 June 2022

பெருமாள் ஏரி கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

பெருமாள் ஏரி கரையை பலப்படுத்தும் பணியை நீர்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு.


கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் நீர் வளத்துறைக்கு சொந்தமான பெருமாள் ஏரி அமைந்துள்ளது பெருமாள் ஏரியை தூர்வாரி அதன் நீரின் கொள்ளளவு அதிகப்படுத்துவதற்கான பணிகள் கடந்த 30.5.2022 முதல் தொடங்கப்பட்டு நடந்து வருகின்றது. தூர்வாரும் பணியில் மண்ணை எடுத்து கரையை பலப்படுத்துவதற்கு உண்டான 32.00 மீட்டர் அகலத்தில் கரைகளில் இருபுறமும் உள்ள முட்புதர்களை அகற்றி கரைகள் முழுவதும் மண் நிரப்பும் பணி நடந்துவருகின்றது.


இப்பணியினை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர் கொள்ளிட கோட்டத்திற்கு உட்பட்ட சிதம்பரம் செயற்பொறியாளர் கே.காந்தரூபன் மற்றும் நீர்வளத்துறை சிதம்பரம் உதவி செயற்பொறியாளர்கள் வி. ஞானசேகர் S. சரவணன் ஆகியோர் பெருமாள் ஏரி கரையை தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.


பெருமாள் ஏரி நீர் பாசன விவசாயிகள் சங்க செயலாளர் A.பாஸ்கரன் மற்றும் சங்க உறுப்பினர் V. குமார்ராஜா         S.மனோகர் ஆகியோர் உடன் இருந்தனர் மேலும் பெருமாள் ஏரி கரையை பலப்படுத்துதல் பணி மேற்கொள்வதால் இக்கரையை சுற்றியுள்ள 18 கிராமங்களில் உள்ள 6500 ஏக்கர் விளை நிலங்கள் நேரடி நீர்பாசன வசதி பெறும் எனவும் மறைமுக நீர்பாசனமாக 3500 ஏக்கர் விளை நிலங்கள் பயன்பெறும் எனவும் விவசாய சங்க செயலாளர் அவர்கள் தெரிவித்தார்.


மேலும் முன்னதாக கரை தூர்வாரும்  முன்பு நவரை போகம் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டது எனவும் குறுவை சாகுபடிக்கு நீர் பற்றாக்குறை நிலவி வந்ததாகவும் தெரிவித்தார் தற்பொழுது நடைபெற்று வரும் கரையை பலப்படுத்தும் பனியினால் நவரை போகம் மட்டும் அல்லாது குறுவை சாகுபடியும் நடைபெறும் எனவும் இதனால் மழை காலங்களில் ஏரியின் உபரி நீரை வெளியேற்றினால் வெள்ள நீர் ஊருக்குள் புகும் அபாயம் இருக்காது எனவும் தெரிவித்தார்.


ஏரி தூர்வாரும் பணியினால் விவசாயிகளுக்கு இரு போகமும் சாகுபடி செய்யும் பயன் கிடைக்கும் எனவும் 50 வருடத்திற்கு முன் ஏரியில் இருந்த நீரின் கொள்ளளவு தற்போது கிடைக்கும் மேலும் மழைக்காலங்களில் அதிக மழை நீரை சேமித்துக் கொள்ள பயனுள்ளதாக அமையும் என்றும் கோடைகாலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நீர் கொள்ளளவு அதிகரிக்கு எனவும்  பொதுமக்களுக்கு இயற்கை நீரூற்று அதிகளவில் கிடைக்கும் இதனால் தண்ணீர் பற்றாக்குறை சரி  செய்யப்படுவதாகும் தெரிவித்தார்.

ஏரியின் இரு கரைகளில் உள்ள நீலத்தடி நீரை உறிஞ்சும் சீமை கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் அகற்றப்பட்டு கரையோரங்களில் உள்ள மரங்கள் பாதிக்காத வண்ணம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஏரியை தூர்வாரும் பணியை செய்து வருகின்றனர் என்று தெரிவித்தனர், முறையான அரசு விதிகளை பின்பற்றி ஏரி தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நீர் வளத் துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். ஏரியில் இருந்து அகற்றப்படும் மண் கரையை பலப்படுத்தும் பணிக்கு உபயோகிக்க படுகிறது  கரையை பலப்படுத்தும் பணி துரிதமாக நடந்து வருவதால் அப்பகுதியைச் சுற்றியுள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்ஏரியை  பலப்படுத்தும் திட்டம் அப்பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்ட நாள் கனவு திட்டம் எனவும் இது தற்பொழுது நடைபெற்று வரும் ஏரியை தூர் வாரும் பணியினால் நிறைவேறி வருவதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/