சிதம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 June 2022

சிதம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்


பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் கடலூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் வருகிற 12-ந்தேதி சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் சிதம்பரம் நகர் மண்டல் தலைவர் என்ஜினீயர் ஜெயக்குமார் தலைமை யில் நடைபெற்றது. 


கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் மாமல் லன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்களை பா.ஜ.க. தொண் டர்கள் வீடு, வீடாக சென்று எடுத்துக்கூறவேண்டும், 12-ந்தேதி சிதம்பரத்திற்கு வருகை தரும் மத்திய மந்திரி எல்.முருகனுக்கு மேள, தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிப்பது, சாதனை விளக்க பொதுக்கூட்டத்திற்கு மண்டல் தோறும் சுமார் 2 ஆயிரம் பா.ஜ.க. உறுப்பினர்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 


இதில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் கோபிநாத் கணேசன், ராஜேஷ், 'லக்கூர் கொளஞ்சி, மாவட்ட பொரு ளாளர் மருதை, மாவட்ட அலுவலக செயலாளர் அரவிந்தன், மரவட்ட துணைத்தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் மண்டல், மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/