கடலூர் மாவட்டம், புவனகிரி அடுத்துள்ள மருதூர் கிராமத்தில் பல நூறாண்டு கால பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ செல்லியம்மன் ஆலயத்தில் தேர் திருவிழாவை கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய அம்சமான 40 அடி ஆழமுள்ள நீர் நிறைந்த கிணற்றிலிருந்து சாமி எடுக்கும் விநோத நிகழ்வு மருதூர் கிராமத்தில் நடைபெற்றது. சாமியை கருவறையில் வைத்து வழிபடுவதே வழக்கமாக கொண்டுள்ள மக்கள் மத்தியில் வழக்கத்திற்கு மாறாக கிணற்றை தெய்வமாக கிராம மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த கிணற்றில் விஷேச மரத்திலான ஏழு செல்லியம்மன் சிலைகள் உள்ளது என்றும் ஆண்டிற்கு ஒருமுறை மட்டும் பூசாரி ஒருவர் கிணற்றில் இறங்கி சிலை எடுப்பார். அதன்படி பூசாரி கிணற்றில் இறங்கி 7 சிலைகளில் ஒரு சிலை மட்டுமே மேல எடுத்து வந்தார். 7 சிலைகளில் அவரது கையில் 1 சிலை மட்டுமே கிடைக்கப்பெறும் என்பது ஐதீகம் அதன்படி கிடைத்த ஒரு சிலையை மஞ்சள் துணியால் மூடி மேல எடுத்து வந்து அச்சிலை பூசாரி வீட்டில் அலங்காரம் செய்யப்பட்டு பின்னர் சிங்க வாகனத்தில் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் வீதி உலா நடைபெற்றது.கிணற்றிலிருந்து சிலையை எடுப்பதைப் பார்க்க ஏராளமான பொதுமக்கள் திரண்டு திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மேலும் கிணற்றில் இருக்கும் நீரானது எக்காலத்திலும் நூர்நாற்றம் வீசாது என்றும் மாறாக கிணற்று நீர் நறுமணம் கொண்டதாகவும் அந்நீரை குழந்தை இல்லா தம்பதியினர் அருந்தினால் குழந்தை வரம் கிட்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும் விழாவின் தொடர்ச்சியாக தேரோட்டம் இன்று நடைபெற உள்ளது பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த தேரில் செல்லியம்மன் விஷேச அலங்காரத்துடன் தேர் பவனி வரும் நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தேரோட்டத்தில் பங்கேற்பார்கள் என விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment