சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் பத்து நாட்கள் உற்சவ திருவிழா நடைபெற்று முடிந்தது - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 8 June 2022

சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் பத்து நாட்கள் உற்சவ திருவிழா நடைபெற்று முடிந்தது


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு  ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் பத்து நாட்கள் உற்சவ திருவிழா நடைபெற்று முடிந்தது.



கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே தவர்த்தாம்பட்டு  கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் ஆலயத்தில்  பத்து நாட்கள் உற்சவ வீதி உலா திருவிழா 27 வெள்ளிக்கிழமை காப்பு கட்டி அன்று முதல் ஸ்ரீ மகா பட்டு மாரியம்மன் உற்சவர் வீதி உலா நடைபெற்று.


தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீடு தேடி வந்து தீப ஆராதனை எடுத்து ஒன்பதாம் நாள் பச்சைக் காளி சிவப்பு காளி காளி ஆட்டம் நடைபெற்று மேலும் பத்தாம் நாள் அம்மனுக்கு மஞ்சள் விளையாட்டு நடைபெற்று அம்மனை ஆடி பாடி குளிர்விக்க பட்டு அம்பாளை இறக்கி ஊஞ்சலில் தாலாட்டு பாடி மற்றும் பெண்கள் அனைவரும் உற்சாகமாக அம்பாளுக்கு கும்மி இட்டு பிறகு தீபாராதனை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது, இந்த பத்து நாட்கள் அம்மன் உற்சவர் வீதி உலா திருவிழா இனிதே நடைபெற்று முடிந்தது இதில் ஆயிரம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் பெற்றனர்.

No comments:

Post a Comment

*/