கடலூர் மாவட்டம் டாப்செட்கோ நிறுவனத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் இருக்கு ரூபாய் 5 கோடி கடனுதவி வழங்கப்படும் மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்பிரமணியன் தகவல்.
தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகம் பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் இனத்தை சார்ந்தவர்கள் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கத்துடன் மிக குறைந்த வட்டி விகிதத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் பொருளாதார கடன் உதவிகள் வழங்கி வருகின்றது நடப்பாண்டு 2021 22 இந்தத் திட்டத்தின் ரூபாய் ஐந்து கோடி கடன் உதவி வழங்குவதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
கடன் உதவி பெறுவதற்கான தகுதிகள், விண்ணப்பதாரர் வயது 18 முதல் 60 க்குள் இருத்தல் வேண்டும் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
நிபந்தனைகள் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படும் சிறு வணிக கடன் பெறுவதற்கு சுய உதவி குழுக்கள் உருவாக்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் கடலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் செய்யப்பட்டிருக்க வேண்டும் 50,000 மேல் கடன் உதவி ஒருவரின் வங்கி கூறும் அதற்குரிய ஆவணங்கள் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் திட்ட அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் கடன் தொகையில் 95 சதவீதம் வழங்கப்படும்.
பொது கால கடன் இந்தத் திட்டத்தின் கீழ் சில்லரை வியாபாரம் சிறு தவறுகள் விவசாயம் போக்குவரத்து கவிஞர் மற்றும் மரபுவழி சார்ந்த தொழில்கள் இனம் தொழில் பட்டதாரிகள் சுய தொழில் தொழில் கல்வி பயில்வது மற்றும் ஏற்கனவே நடைபெற்றுவரும் தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு தனிநபருக்கு ரூபாய் 15 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. நபர் ஒருவருக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் ரூபாய் 5 லட்சம் வரையில் 7 சதவீதம் வட்டி விகிதத்தில் 10 லட்சம் வரையிலும் அதிகபட்சமாக ரூபாய் 15 லட்சம் 8 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் பெறலாம் கடன் தொகைக்கு ஏற்ப 3 ஆண்டு முதல் எட்டு ஆண்டுகளுக்குள் கடனை திருப்பி செலுத்துதல் வேண்டும்.
சிறு வணிக கடன் ஆடவர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களின் ஒரு உறுப்பினருக்கு ரூபாய் ஒரு லட்சம் வீதம் ஒரு குழுவிற்கு அதிகபட்சமாக ரூபாய் 15.00.000 வீதம் மகளிருக்கு 4 சதவீத ஆடவருக்கு 5 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும் கடனை திருப்பி செலுத்துதல் காலம் 4 ஆண்டுகள் ஆகும்.
புதிய பொற்கால திட்டம் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கான அதிகபட்ச கடன் தொகை ரூபாய் இரண்டு லட்சம் 5 சதவீத வட்டி விகிதத்தில் வழங்கப்படும் கடன் தவணை காலம் 3/8 ஆண்டுகள் ஆகும்
கறவை மாட்டு கடன் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கும் பட்சத்தில் நபர் ஒருவருக்கு 30 ஆயிரம் வீதம் ரெண்டு கறவை மாடுகள் வாங்குவதற்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.
சிறு குறு விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதிகளை அமைக்க மானியத்துடன் கூடிய கடன் சிறு குறு விவசாயிகளுக்கு விவசாயம் சார்ந்த பணிகளுக்கு புதிய ஆழ்துளை கிணறு அமைத்து நீர் பாசன வசதிகளை ஏற்படுத்துவதற்கு கடன் தொகையில் 50 விழுக்காடு அல்லது அதிகபட்சம் 50 ஆயிரம் வரை அரசு மானியம் மட்டுமே கடன் உதவி வழங்கப்படும்.
கடன் விண்ணப்ப படிவங்களை www.Cuddalore.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
1.ஜாதி வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ்
2 .முன்னணி உள்ள நிறுவனம் ஒன்றில் இருந்து விலைப்புள்ளி
3. திட்ட அறிக்கை பெரிய திட்டமாக இருந்தால் மட்டும்
4. குடும்ப அட்டை
5. ஆதார் அட்டை
6. ஓட்டுனர் உரிமம் (போக்குவரத்து வாகனங்கள் கடன் பெறுவதாக இருந்தால் மட்டும்)
7. நிதி உதவி பெறுவதற்கான ஆவணங்கள்/வங்கி கோரும் அடமானக் உரிய ஆவணங்கள்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து மேற்குறிப்பிட்ட உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மாவட்ட ஆட்சியரகம் கடலூர் 607001 அல்லது கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் கூட்டுறவு பண்டகசாலை வளாகம் வெள்ளி கடற்கரை சாலை கடலூர் 607001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவத்தை அனுப்பிவைத்தால் வேண்டும் மேற்கண்ட பொருளாதார கடனுதவி திட்டத்தினை பயன்படுத்தி தகுதியுள்ள நபர்கள் தங்களது பொருளாதார நிலையை மேம்படுத்தி கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன் கேட்டுக்கொண்டார்.

No comments:
Post a Comment