கடலூர் மாவட்டம், சிதம்பரம் B.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் முதல் நிலை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் திரு. க.பொன்முடி அவர்கள், மாண்புமிகு தமிழக வேளாண்த்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்கள், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. தொல். திருமாவளவன் அவர்கள், காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் திரு. Sinthanai Selvan சிந்தனைச் செல் வன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் ந. சாந்தி அவர்கள், ஆசிரியர்கள், கல்லூரி பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் சாதிக் அலி

No comments:
Post a Comment