சேத்தியாத்தோப்பில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

சேத்தியாத்தோப்பில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி

சேத்தியாத்தோப்பில் சர்வதேச புகையிலை எதிர்ப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு ராம்தேவி மருத்துவமனை மற்றும் காவல் நிலையம் இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் மைக்கல் இருதயராஜ் தலைமை தாங்கினார். அரிமா சங்க வட்டார தலைவர் மணிமாறன், அரிமா சங்க தலைவர் தங்க. செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர்.


சிறப்பு விருந்தினராக சுந்தரம் சேத்தியாத்தோப்பு சரக காவல் துணை கண்காணிப்பாளர் பங்கேற்று 18 வயது உட்பட்டோருக்கு சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பது, பொது இடங்களில் புகையிலை பிடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் வியாபாரிகள் சமுக பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.  

நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் பரணிதரன் புகையிலை பொருட்கள், சிகரெட் தொடர்ந்து உபயோகிப்பதால் காசநோய், ஆஸ்துமா, கேன்சர்,செரிமான கோளாறுகள், இருதய இரத்த குழாயில் அடைப்பு போன்ற விளைவுகள் உண்டாவதால் புகையிலை பொருட்களை தவிர்க்க வலியுறித்தினார்.நிகழ்ச்சியில் வர்த்தக சங்க தலைவர் மகாராஜன், தாமரைச்செல்வன், தில்லை , காவலர்கள், வர்த்தகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


செய்தியாளர் கே.பாலமுருகன்


No comments:

Post a Comment

*/