நெல்லிக்குப்பம் நகராட்சியில் 4 கோடியில் 63 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 1 June 2022

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 4 கோடியில் 63 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சியில் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று மாலை 4.00மணியளவில் தொடங்கியது. கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் அவர்களால் திருக்குறள் வாசிக்கப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து அண்ணாகிராம வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சையது ஷாஜகான் அவர்களால் புகையிலை ஒழிப்பு உறுதிமொழி எற்கப்பட்டது. உறுதிமொழியின் போது அனைவரும் எழுந்து நின்று கையை நீட்டி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் நகரமன்ற துணைத்தலைவர் கிரிஜா திருமாறன், பொறியாளர் பாண்டு,பணி மேற்பார்வையாளர் வாசு மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். நெல்லிக்குப்பம் நகராட்சியில் 4 கோடியில் 63 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.


முத்தமிழ் 25 வது வார்டு

குறிப்பிட்ட ஒருசில ஒப்பந்ததாரர்களுக்கு மட்டுமே ஒப்பந்தங்கள் வழங்குவது ஏற்புடையது அல்ல என குறிப்பிட்டார்.மேலும் நகராட்சி நிர்வாகம் பொதுநிதியிலிருந்து பல்வேறு பணிகள் செய்துவருவதால் ஊழியர்களுக்குகூட சம்பளம் கொடுக்க முடியாத நில ஏற்படும் என தெறிவித்தார்.

பழுதடைந்த பழைய வாகணங்களை ஏலம் விட வேண்டும் எனவும், ஒப்பந்த மதிப்பீடுகளில் மதிப்பீடு தொகை பதிவு செய்யப்படவில்லை,

18கழிப்பறைகள் மக்களின்பயன்பாடு இல்லாமல் உள்ளது எப்போது சரிசெய்யப்படும் என கேள்வி எழுப்பினார்.

பொறியாளர் பாண்டு

நகரமன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.

பாரூக் ஹூசைன் 18வது வார்டு.

நகராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் இல்லை,

கான்சாகிப் மார்க்கெட்டில் உள்ள இரும்பு கேட் உடைந்த நிலையில் உள்ளது. புணரமைப்பு நடவடிக்கை தேவை.

ஆனந்தராசு 7 வது வார்டு

அம்பேத்கர் பேருந்து நிலைய முகப்பில் பெரிய பள்ளம் ஒன்று பல மாதங்களாக உள்ளது. உடனடியாக பள்ளத்தை அடைத்து விபத்து ஏற்படாதவாறு நடவடிக்கை வேண்டும்.

இக்பல்  8வது வார்டு

நெல்லிக்குப்பத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை விரிபடுத்த கோரிய சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் அவர்களின் கோரிக்கை நிறைவேறுமா?

சாலை அகலப்படுத்தும் பணியில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் இருக்கின்ற இடத்தில் மட்டும் சாலை போடுவதால் விரிவாக்கம் என்பது கேள்விக்குறியாகி உள்ளது. சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்பகளை தடுக்கும் வகையில் சாலை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். அதே குறுகிய சாலையில் விரிவாக்கம் செய்யாமல் சாலை போடப்பட்டால் பொதுமக்களை திரட்டி பல்வேறு போராட்டங்களை தொடர்வோம் என தெறிவித்தார்.

ராணி 20வது வார்டு

எங்கள் பகுதியில் குடிநீருக்கு மிகவும் சிரமப்படுகிறோம். ஆகையால் எங்கள் திருவள்ளுவர் பகுதியில் குடிநீர் மேல்நீர் தேக்கத்தொட்டி கட்டித்தரவேண்டும் என கோரிக்கை வைத்து பதாகையை உயர்த்தி அனைவரது கவணத்தையும் ஈர்த்தார்.

பூபாலன் 28 வது வார்டு

துப்புரவு பணிகளில் ஒப்பந்தாரர்களை மட்டுமே நியமிக்கும் நகராட்சி நிர்வாகம் நிரந்தர தொழிலாளர் களையும் பணியமர்த்த வேண்டும் என கோரினார்.

No comments:

Post a Comment

*/