கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் நடைபெறும் நெய்தல் கோடைவிழா மற்றும் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சியினை அமைச்சர் பெருமக்கள் பொதுமக்கள் பார்வைக்கு துவக்கிவைத்தனர். இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்பரமணியம். முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து மேடை நிகழ்வினில் பங்கேற்று அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இக்கோடை விழாவினையொட்டி மேற்கொள்ளப்பட்ட மணல் சிற்பங்கள் மற்றும் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
கடலூர் மாவட்டத்திற்கு ஒரு சிறந்த சுற்றுலா தளமாக இந்த வெள்ளி கடற்கரை அமைந்துள்ளது. இந்த வெள்ளி கடற்கரைக்கு உள்ளூர். மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வந்து செல்கின்றனர். நெய்தல் கடல்சார்ந்த இப்பகுதியில் நடைபெறும் நெய்தல் கோடை விழா ஒரு சிறப்பு வாய்ந்த விழா, இவ்விழா 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு தற்போது வெகு சிறப்பாக கடலூர் மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்விழாவில் அரசு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அனைத்து துறைகளின் வாயிலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, வீட்டு உபயோகப்பொட்கள் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ/ மாணவியர்களுக்கு பயனுள்ள வகையில் புத்தக கண்காட்சி அரங்குகள் உள்ளிட்வை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று (17.06.2022) துவங்கப்பட்டுள்ள இக்கோடை விழா மற்றும் அரசு பல்துறை பணிவிளக்க கண்காட்சி 18.06.2022 மற்றும் 19.06.2022 ஆகிய நாட்களுக்கு அனைவருக்கும் பயனுள்ள வகையிலும் மற்றும் பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் கலை நிகழ்ச்சியும், அரசு இசைப்பள்ளி மாணவர்களின் நிகழ்ச்சியும், பட்டிமன்றம், இன்னிசைக் கச்சேரி உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சகளுடன் நடைபெறுகிறது. இச்சிறப்பு வாய்ந்த கோடை விழாவினை அனைவரும் கண்டு களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இவ்விழாவில் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் மா.செ.சிந்தனைச்செல்வன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.சக்திகணேசன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி)/ திட்ட இயக்குநர், பவன்குமார் ஜி. கிரியப்பனவர், , கடலூர் மாநகராட்சி மேயர் திருமதி. சுந்தரி ராஜா அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.


No comments:
Post a Comment