கலைஞர் 99வது பிறந்தநாள் விழா திட்டக்குடியில் அமைச்சர் சி.வெ. கணேசன் தலைமையில் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சியில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 99வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
சிறப்பு அழைப்பாளராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் கலந்துகொண்டு கலைஞர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் பொதுமக்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் அவர்கள் அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பட்டூர் அமிர்தலிங்கம், திட்டை நகரச் செயலாளர் V.P.P.பரமகுரு, திட்டக்குடி நகர்மன்றத் தலைவர் வெண்ணிலா கோதண்டம்,மற்றும் திட்டக்குடி நகர்மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்; சாகுல் அமீது
No comments:
Post a Comment