கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் ஒன்றிய நகர திமுக சார்பில் வட்டாட்சியர் அலுவலகம் அருகில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களின் ஆலோசனைப்படி எம்ஆர்கேபி கதிரவன் அவர்கள் வழிகாட்டுதலின்படி நகர செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் முத்தமிழறிஞர் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதி அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு காட்டுமன்னார்கோயில் ஒன்றிய செயலாளர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கலைஞர் மு கருணாநிதி அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர் பின்பு அனைவருக்கும் உணவு மற்றும் தென்னை மரக்கன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் காட்டுமன்னார்கோயில் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ராமலிங்கம் ஒன்றிய அவைத்தலைவர் கருணாநிதி ஒன்றிய பொருளாளர் எம்ஆர் சண்முகம் மற்றும் மாவட்ட பிரதிநிதி பூக்கடை செந்தில் கல்யாணசுந்தரம் நகர துணை செயலாளர் சுப்பிரமணியன் நகர பொருளாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட ஒன்றிய முன்னாள் இன்னால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் மகளிர் அணியினர் இளைஞர் அணியினர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர் கே பாலமுருகன்
No comments:
Post a Comment