கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா - சேத்தியாத்தோப்பு அம்மன்குப்பன் ஊராட்சியில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 3 June 2022

கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா - சேத்தியாத்தோப்பு அம்மன்குப்பன் ஊராட்சியில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.

கலைஞரின் 99 வது பிறந்த நாள் விழா சேத்தியாத்தோப்பு அம்மன்குப்பன் ஊராட்சியில் அன்னதானம் வழங்கி கொண்டாட்டம்.


கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள அம்மன்குப்பம் ஊராட்சியில் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞரின் 99வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அம்மணங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவரும் ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவருமான அப்பா ரவிக்குமார் தலைமை தாங்கினார் ஒன்றிய கவுன்சிலர் செல்வராஜ் ஒன்றிய இளைஞரணி செயலாளர் ஜெகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக புவனகிரி மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ எஸ் மதியழகன் பங்கேற்று கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து அன்னதானம் வழங்கும் நிகழ்வை துவக்கி வைத்தார் ஏழை எளிய பொதுமக்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் வேணுகோபால் சுரேஷ் ராஜேந்திரன் தவிதன் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

No comments:

Post a Comment

*/