இந்தியகுடியரசுகட்சி சார்பில் புதிய பேருந்து நிலையத்தை புதிய மாவட்ட ஆட்சியாளர் அருகே அமைக்ககோரி போராட்டம்
கடலூா் மாநகராட்சியில் புதிதாக அமையவுள்ள பேருந்து நிலையத்தை குறிஞ்சிப்பாடி சட்டப் பேரவை தொகுதிக்கு மாற்றம் செய்வதை கைவிட வேண்டும், பெரும்பான்மை மக்களின் கருத்துப்படி புதிய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகிலேயே பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்துவிட்டு பெட்ரோலியப் பொருள்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
மாவட்ட ஆட்சியரின் பழைய அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் மாவட்டச் செயலா் கே.மதியழகன் தலைமை வகித்தாா். சிறைப்புஅழைப்பாளராக இந்தியகுடியரசுகட்சி கடலூர் மாவட்ட தலைவர், பாலவீரவேல், கடலூர் நகர தலைவர் ராமலிங்கம், புரட்சிபாரதம் மாவட்ட தலைவர் லட்சுமணன், குறிஞ்சிப்பாடி ஒன்றிய தலைவர் சிவக்குமார், தேசியமக்கள்கட்சி மாநிலதலைவர் கலியவீரமணி, அகில இந்திய மக்கள் சேவை மக்கள் முன்னேற்றகழக தலைவர் தங்கம் சிகாமணி, ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.
No comments:
Post a Comment