கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் பு.கொளக்குடி ஊராட்சியில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 99.வது பிறந்தநாளையொட்டி தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத் துறை அமைச்சர் எம் .ஆர் .கே. பன்னீர்செல்வம் அவர்களின் உத்தரவின் பேரில் புவனகிரி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் டாக்டர் மனோகரன் வழிகாட்டுதலின்படி கழகக் கொடி ஏற்றி மறைந்த முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கி வெகு விமர்சியாக கொண்டாடினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய பொறியாளர் அணி துணை செயலாளர் சிவானந்தன் கலந்துகொண்டு தலைமை தாங்கினார் முன்னாள் கிளைக் கழக செயலாளர்கள் ராமானுஜம் மாயவன் முன்னிலை வகித்தனர் கிளைக் கழகச் செயலாளர்கள் R.செல்வகுமார் M.சசிகுமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்று கழக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினர் இறுதியாக கழக நிர்வாகி சிவஞானம் நன்றி உரை வழங்கினார்.
No comments:
Post a Comment