கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் இரங்கல்!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 6 June 2022

கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு - கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் இரங்கல்!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில், நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த பெண் பிரியா, மாணவிகள் மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர். இதனால் அவர்கள் தண்ணீரில் மூழ்கினார்கள். 

சத்தம்கேட்டு திரண்ட கிராம மக்கள், உடனடியாக ஆற்றில் மூழ்கிய 7 பேரையும் மீட்டு கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுமிகள் உள்பட 7 பேரும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்திருந்தார். இதையடுத்து ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து  தடுப்பணையில் மூழ்கி நேற்று முன்தினம் 7 சிறுமிகள் உயிரிழந்தனர். இதை அறிந்த கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன்  அ. குச்சிப்பாளையம் கிராமத்திற்கு சென்று  உயிரிழந்த 5 சிறுமிகளின்  உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி குழந்தைகளை இழந்த பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார் .


பின்னர் உயிரிழந்த ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் தலா பத்தாயிரம்  ரூபாய் வழங்கினார் இதே போன்று மீதமுள்ள இருவர் குடும்பங்களுக்கு தலா பத்தாயிரம் வீதம் அயன் குறிஞ்சிப்பாடி கிராம நிர்வாக அதிகாரி மூலம் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன் வழங்கினார்.


No comments:

Post a Comment

*/