கடலூர் அடுத்த அருங்குணம் குச்சிப்பாளையத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை அமைந்துள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை அதே பகுதியை சேர்ந்த சங்கீதா(16), மோனிஷா(16), திவ்யதர்ஷினி(10), பிரியதர்ஷினி(15), நவநிதா(18), சுமந்தா(18), பிரியா(18) ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதியில் இறங்கினர்.அந்த பகுதி ஆழமாகவும், சேறு நிறைந்ததாகவும் இருந்துள்ளது. இதில் இறங்கியவர்கள் ஒருவர் பின் ஒருவராக 7 பேர் சேற்றில் சிக்கிக் கொண்டனர்.
தகவலறிந்த அப்பகுதியினர் அவர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் இவர்கள் முன்பே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் மருத்துவமனையில் திரண்டு கதறி அழுது கொண்டிருக்கிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment