ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த அரிசி லாரி பின்புறமாக சென்றதில் 6 இருசக்கர வாகனங்கள் நசுங்கி முற்றிலும் சேதம்.
கடலூர் மாவட்டம், விருத்தாசலம் காட்டுக்கூடலூர் சாலையில் உள்ள மீன் மார்க்கெட் எதிரில் S M G அரிசி கடைக்கு ஆந்திராவில் இருந்து சுமார் 50 டன் அரிசி ஏற்றிவந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக சென்றதால் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்கள் மீது ஏறி வாகனங்கள் நொறுங்கியது.
அப்போது வாகனத்தின் உரிமையாளர்கள் யாரும் அருகில் இல்லாததால் அதிஷ்டவசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. மேலும் இரண்டு JCB இயந்திரம் மூலம் அப்புறப்படுத்த முயன்றபோது லாரியின் சக்கரங்கள் மண்ணுக்குள் ஆழமாக இறங்கியதால் அச்செயல் கைவிடப்பட்டு, மேலும் அரிசி மூட்டைகளை கீழே இறக்கிவிட்டு அப்புறப்படுத்தும் பணியில் காவல்துறை ஈடுபட்டனர், அப்போது பாதிக்கப்பட்ட இருசக்கர வாகனங்களின் உரிமையாளருக்கும் காவல்துறைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி வியாபாரியிடம் கேட்டபோது இப்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சாலை பணிகள் மந்தமாக செயல்படுவதாகவும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதாகும், அடிக்கடி இப்பகுதியில் சாலை விபத்துக்கள் ஏற்படுவதாகவும் அரிசி கடை உரிமையாளர் ஜின்னா கூறினார்.

No comments:
Post a Comment