கடலூர் மாவட்டம், வேப்பூர் அடுத்த மேமாத்தூர் புது காலணி பகுதியில் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஶ்ரீ முத்து மாரியம்மன் கோவில் உள்ளது.
இக்கோயிலில் நாளை மறுநாள் ஜீலை 1- ந் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டி திருவிழா நடத்த அக்கிராம பொதுமக்கள் கூடி முடிவெடுத்தனர்
அதனை தொடர்ந்து அம்மனுக்கு சொந்தமான 5 சவரன் நெக்லஸ் மற்றும் அம்மனுக்கு அணிவிக்க கூடிய தாலி, மாங்கா வடு, தாலி குண்டு ஆகிய நகைகள் உள்ளது.
இதனை கோவிலுக்கு சொந்தமான கட்டிடத்திலுள்ள பீரோவில் வைத்து பூட்டி, திருவிழா காலங்களில் மீண்டும் அம்மனுக்கு நகைகளை அணிவிப்பது வழக்கமாகும்
இக்கோவிலின் 5 தர்மகர்த்தாவினர் பீரோவில் தங்க நகைகளை வைத்து பூட்டி பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், வரும் 1ம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் மாரியம்மன் கோவில் திருவிழா தொடங்குகிறது. இதனால், அம்மனின் நகைகளை மாற்றி புது நகைகள் வாங்க கிராம மக்கள் தீர்மானத்தனர்.
அதனால், நேற்று ஜீன் 28 ந் தேதி காலையில் ஊர் மக்கள் முன்னிலையில் நகைகளை தர்மகர்த்தாவினர் எடுத்து வந்தனர்.
அப்போது, அம்மனின் நகைகளில் 5 சவரன் தங்க நெக்லஸிற்கு பதிலாக, கவரிங் செயின் இருப்பது தெரிய வந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கிராம மக்கள் அளித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
No comments:
Post a Comment