கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம் கிருஷ்ணாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 1990ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையில் 32 ஆண்டு காலம் சிறப்பாக எழுத்தராக பணிபுரிந்த வந்த அ.மோகன் என்பவர் வயது முதிர்வின் காரணமாக தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி பணி நிறைவு பெறுவதையெட்டி கூட்டுறவு சங்கத் தலைவர் E.G.பிரித்திவி தலைமையில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் எல். வேல்முருகன் என். அன்பரசு முன்னாள் செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவர் பழனி அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் பணி நிறைவு பெற்ற எழத்தார் அ.மோகன் அவர்களுக்கு கூட்டுறவு சங்க பணியாளர்கள் சார்பாக மலர் மாலை அணிவித்து தங்கமோதிரம் போன்ற நினைவு பொருட்களை வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க பணியாளர்கள் என். அன்பரசு எம் .ரவி எஸ்.வேல்முருகன் கேஷீயர் முன்னாள் செயலாளர் அ.அன்பழகன் எஸ். ராஜேந்திரன் எம். பாலசுப்ரமணியன் ஆர். சிவப்பிரகாசம், ஜி .முருகவேல் கே .மோகன், கே .சுதாகர், எம் .சத்தியா, ஆர் .மோகன் மற்றும் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

No comments:
Post a Comment