கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் கடந்த 11.06.2022 சனிக்கிழமையன்று கடலூர் மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பழைய குற்றவாளிகளை கண்காணித்து கஞ்சா விற்பணை செய்தால் அவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பித்ததின்பேரில் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகள் மேற்பாற்வையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் தலைமையில் 37 தனிபடைகள் அமைக்கப்பட்டு கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் கஞ்சா சம்மந்தமான சோதனை நடவடிக்கைகள் அதிரடியாக மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் உட்கோட்ட காவல் அதிகாரிகள் திருப்பாதிரிபுலியூர், குப்பங்குளம்,சாலக்கரை, தூக்கணாம்பாக்கம், கடலூர் பெண்ணையாறு கரையோரம், சுண்ணாம்புகார தெரு, புதுப்பாளையம், ரயில் நிலையம், தைக்கால் ஆகிய இடங்களில் சோதணை மேற்கொள்ளப்பட்டது.
சிதம்பரம் உட்கோட்ட காவல் அதிகாரிகள் ஓமக்குளம் சுடுகாடு, ஜமால் நகர், பரங்கிப்பேட்டை மாதாகோவில் தெரு, கொடிமர தெரு, பெரியகுப்பம் வெள்ளாற்று பகுதி எடத்தெரு, பேருந்து நிலையம், ஆலப்பாக்கம் ரயில்வே கேட், புதுச்சத்திரம் ரயில்வேகேட், வில்லியனூர் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
பண்ருட்டி உட்கோட்ட காவல் அதிகாரிகள் கடாம்புலியூர், பெரியகாட்டுசாகை, மாளிகம்பட்டு, A.ஆண்டிக்குப்பம், நெல்லிக்குப்பம், P.N.பாளையம், R.S மணி நகர், நெல்லிகுப்பம், மேல்பட்டாம்பாக்கம். நடுவீரப்பட்டு பேருந்து நிலையம், C.N பாளையம், பாலூர் ஆகிய கிராமங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
விருத்தாச்சலம் உட்கோட்ட காவல் அதிகாரிகள் விருத்தாச்சலம் பாலக்கரை, பெண்ணாடம், ரயில்வே ஜங்ஷன், விள ஏரி, மாரியம்மன்கோவில் பின்புறம் பள்ளிப்பட்டு, பழையபட்டினம் கீரனூர், சோழன் நகர் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சேத்தியாத்தோப்பு உட்கோட்ட காவல் அதிகாரிகள் கீழ்புளியங்குடி, சந்தைதோப்பு, லால்பேட்டை, கோட்டைமேடு, அய்யன்குடி ஆகிய பகுதிகளிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. திட்டக்குடி உட்கோட்ட காவல் அதிகாரிகள் திட்டக்குடி பேருந்துநிலையம், ஆவினங்குடி, சிறுமங்கலம், ராமநத்தம் ஆற்றுஓரம், நல்லூர், சிறுபாக்கம் அடரி, மங்களுார் ஆகிய பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் 98 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த திடீர் சோதனையின்போது கஞ்சா எதுவும் கைப்பற்றப்படவில்லை.


No comments:
Post a Comment