கடலூர் ஒன்றியம் காரைக்காடு கிராமத்தில் அருள்தரும் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய அஷ்டபந்தன கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டலாபிஷேகம் நடைபெற்று வருகிறது. மண்டல அபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மண்டலாபிஷேக இதை முன்னிட்டு கடலூர் வண்டிப்பாளையம் அப்பர் கரையேற விட்ட குப்பம் அப்பர் கைலாய வாத்திய குழு மற்றும் உழவார பணி குழுமற்றும் அறக்கட்டளை சேர்ந்த சிவனடியார்கள் திருக்கூட்டம் வாத்திய இசையுடன் தொண்டு செய்தனர்.
பின்னர் ஸ்ரீ முத்துமாரி அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மண்டலாபிஷேக நிகழ்ச்சிகளை சின்ன காரைக்காடு சின்ன வாத்தியார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.


No comments:
Post a Comment