விருத்தாசலத்தில் தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் தங்க, வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கம் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு. தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 14 June 2022

விருத்தாசலத்தில் தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் தங்க, வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கம் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு. தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி.

விருத்தாசலத்தில் தனியார் பஸ் உரிமையாளர் வீட்டில் தங்க, வெள்ளி மற்றும் 2 லட்சம் ரொக்கம் திருட்டு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலை வீச்சு.  தொடர் திருட்டால் பொதுமக்கள் பீதி.


கடலூர் மாவட்டம், விருத்தாசலம் தெற்கு பெரியார் நகர் ரோஜாப்பூ தெருவில் வசிக்கும் பஸ் உரிமையாளர் ஜெயசந்திரன் மகன் சக்தி வெங்கடேசன்,


இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் குருவாயூர் கோவிலுக்கு சென்றுள்ளனர். 


இந்த நிலையில் அவரது அப்பா ஜெயச்சந்திரனுக்கு உடல்நிலை  சரியில்லாததால் கோயமுத்தூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்று இன்று அதிகாலை வீடு திரும்பிய நிலையில் 


பூட்டியிருந்த வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை, பார்த்த வீட்டின் உரிமையாளர் உள்ளே சென்று பார்த்த போது  மர்ம நபர்கள் பீரோவைத் திறந்து அதில் இருந்த 30 லட்சம் மதிப்பிலான அரை கிலோ தங்க  நகை, 15 கிலோ வெள்ளி, இரண்டு லட்ச ரூபாய் பணம் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது , உடன் விருத்தாசலம் காவல்துறைக்கு தகவல்  அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


விருத்தாசலத்தில் தொடர் திருட்டு சம்பவத்தால் காவல்துறை விழிப்புடன் செயல்பட  பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை.

No comments:

Post a Comment

*/