பெலாந்துறை அரசுப் பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 22 June 2022

பெலாந்துறை அரசுப் பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு


பெலாந்துறை அரசுப் பள்ளியில் 100 விழுக்காடு தேர்ச்சிக்கு பாடுபட்ட ஆசிரியர்களுக்கு  பாராட்டு.


கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், பெலாந்துறை கிராமத்தில் இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2021 – 2022 கல்வியாண்டில் பன்ணிரண்டாம் வகுப்பில் 100 விழுக்காடு தேர்ச்சியும், மாவட்டத்தில் இரண்டாவது இடம் பெற்றதையொட்டி பள்ளி தலைமை ஆசிரியர்,உதவி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும் முருகன்குடி செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் பொருப்பாளர்களும், திருவள்ளுவர் தமிழர் மன்ற பொருப்பாளர்களும் இணைந்து ஆசிரியர் பெருமக்களுக்கு துண்டு அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. நிகழ்வில், முருகன்குடி முருகன், எல்.ஐ.சி. வெங்கடேசன், ஆசிரியர் இளவரசு, சக்கரவர்த்தி, ஆசிரியர் கார்த்திகேயன், பிரகாசு, மணிமாறன், வேல்முருகன், ஆசிரியர் ஞானபிரகாசம், சசிகுமார், மணிவேல், பாக்யராஜ், அன்பரசன், மணியரசன், தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இப்பள்ளியில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பேருந்து வசதி இல்லை அடிப்படை வசதி குறைவாக இருக்கிறது. பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் தேவைப்படுகிறது. மாணவ, மாணவிகள் பாதுகாப்புக்காக சுற்றுச் சுவர் அமைக்கப்பட வேண்டும். கண்காணிப்புக் கருவி (சிசிடிவி) பொருத்த வேண்டுமென அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

No comments:

Post a Comment

*/