நான்காவது தேசிய மாஸ்டர் விளையாட்டு போட்டி 18.5.2022 முதல் 22.5.2022 வரை கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. கடலூர் ஆயுதப்படை தலைமை காவலர் ஞானமுருகன், 30 வயதுக்கு மேற்பட்டவருக்கான கபாடி விளையாட்டு பிரிவில் தமிழக அணிக்காக கலந்து கொண்டு விளையாடி தங்க பதக்கம் வென்றார்.
41 வது அகில இந்திய மூத்தோர்களுக்கான தடகள விளையாட்டு போட்டிகள் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் 20.5.2022 முதல்22.5.2022 வரை மூன்று நாட்கள் நடைபெற்றது.
கடலூர் ஆயுதப்படை முதல் நிலை காவலர் ஷாம்பிரகாஷ் 35 வயதுக்கு மேற்பட்டவருக்கான 4x100 மீட்டர், 4x400 மீட்டர் பிரிவில், முதல் இடம் பிடித்து தங்க பதக்கத்தையும், 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் பிரிவுகளில் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் வென்றார்.
ஆயுதப்படை முதல் நிலை காவலர் ரஞ்சித் 30 வயதுக்கு மேற்பட்டவருக்கான 4x 100 மீட்டர் பிரிவில் பங்கேற்று முதல் இடம் பிடித்து தங்க பதக்கமும், 200 மீட்டர் பிரிவில் பங்கேற்று முன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.
கடலூர் துறைமுக காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சக்திவேல் 4x100 மீட்டர் பிரிவில் பங்கேற்று இரண்டாம் இடம் பெற்று வெள்ளி பதக்கத்தையும், 100 மீட்டர் 200 மீட்டர் பிரிவில் பங்கேற்று முன்றாம் இடம் பிடித்து வெண்கலம் பதக்கம் வென்றார்.
விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. சக்திகணேசன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளர் சௌந்தரராஜன், ஆயுதப்படை ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment