கடலூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி மாணவரணி மகளிர் பாசறை சார்பில் ஒன்றிய அரசின் தமிழர் விரோத போக்கை கண்டித்து தமிழ் விரோதப் போக்கை கண்டித்து கடலூரில் பழைய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் எதிரில் மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார் .ஒன்றிய அரசின் அடாவடித்தனங்களை தமிழ் தமிழர் விரோத போக்குகளை மாநில உரிமை பறிப்பு கலை பற்றி கண்டன உரை ஆற்றினார்.
மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், செயலாளர் வேலு, முன்னிலை வகித்தனர். மண்டல செயலாளர் மாவட்ட தலைவர் தண்டபாணி ,மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட அமைப்பாளர் மணிவேல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன், வடலூர் தலைவர் புலவர் ராவணன் ,மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பெரியார் செல்வன் ,பெரியார் வீர விளையாட்டுக் கழக தலைவர் மாணிக்கவேல் ,கடலூர் நகர தலைவர் எழிலே ,மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இராமநாதன் ,ஆகியோர் கண்டன உரை ஆற்றினர் ,அப்பியம் பேட்டை தனசேகரன், வடலூர் இந்திரஜித் ,முருகன் செந்தில் வேல் வேணுகோபால் நூலகர் கண்ணன் ஒன்றிய தலைவர் கனகராஜ், கடலூர் மாதவன் கரட்சகன் , ராஜேந்திரன் அருள்செல்வன் ஆதவன் அறிவு பொன்னி தர்மன் கடலூர் கணேசன் காசிநாதன் வசந்த் மக்கள் அதிகாரம் பாலு மீனவர் விடுதலை வேங்கை துணைப் பொதுச் செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் ஆர்ப்பாட்டம் முழக்கம் எழுப்பப்பட்டது முடிவில் கடலூர் சின்னதுரை நன்றி கூறினார்.

No comments:
Post a Comment