கடலூர்: தாய் இறந்த மன வலியோடு தேர்வு எழுதிய மாணவன் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

கடலூர்: தாய் இறந்த மன வலியோடு தேர்வு எழுதிய மாணவன்

10- ம் வகுப்பு பொது (பப்ளிக்) தேர்வு என்பதால் தாயை பறிகொடுத்த துக்கத்தையும் மனதில் தாங்கிக் கொண்டு தன் குடும்ப சூழலையும் எதிர்காலத்தையும் கருதி இன்று தேர்வு எழுதிய ஏழை மாணவன் ஜோஷ்வா


குறிஞ்சிப்பாடி தாலுக்கா பெத்தநாயக்கன் குப்பம் ஆர்.சி தெருவைச் சேர்ந்த ஆரோக்கியம் மனைவி பேபி (எ) சலேத்மேரி வயது (33) இவர் கடந்த சில வருடங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டார். இவருக்கு ஜோஷ்வா வயது (15) குறிஞ்சிப்பாடி ஸ்ரீராம் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
 

மனநிலை பாதிக்கப்பட்ட மகள் வயது (9) இரண்டு பிள்ளைகள் உள்ளனர். நடைபெற்றுக் கொண்டிருப்பது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்பதால் தன் குடும்ப ஏழ்மை நிலையையும் எதிர்காலத்தையும் கருதி தன் தாய் இறந்து அடக்கம் செய்யாமல் இருந்து வரும் நிலையில் இன்று தனது துக்கத்தை மனதில் வைத்துக்கொண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் உறவினர்களிடேயும் பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது இது போன்ற நிகழ்வு எந்த பிள்ளைகளுக்கும் வரக்கூடாது என்பதே எல்லோருடைய வேண்டுதலும்.


தற்போது பொதுத்தேர்வு எழுதிவிட்டு சென்ற மாணவன் தனது தாயின் இறுதிச் சடங்கை செய்து வருகிறார் . இச்சம்பவம் நம்மையும் ஒரு பக்கம் மன வருத்தத்தை ஏற்படுத்தி இருந்தாலும் தன் தாயை இழந்த துக்கத்தையும் மனதில் புதைத்து வைத்துக்கொண்டு படித்ததை மனதில் புதைத்து வைத்துக் கொண்டதை வெளிக் கொணர்ந்து பொதுத்தேர்வை எதிர்கொண்ட மாணவன் ஜோஷ்வா

No comments:

Post a Comment

*/