விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற மலர் முருகன்,இன்று பதவியேற்பு. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 30 May 2022

விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற மலர் முருகன்,இன்று பதவியேற்பு.

விருத்தாசலம் ஒன்றிய சேர்மன் பதவிக்கு நடந்த மறைமுக தேர்தலில் வெற்றி பெற்ற மலர் முருகன்,இன்று பதவியேற்பு.


கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் ஒன்றியத்தில் கடந்த மார்ச் 5-ஆம் தேதி,ஒன்றிய சேர்மனாக இருந்த,  திமுகவை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மீது,கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால்,ஒன்றிய சேர்மன் பதவி பறிபோனது. இந்நிலையில் விருத்தாச்சலம் ஒன்றியத்தில் புதிய ஒன்றிய சேர்மனாக மலர் முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இத்தேர்தலில் விருத்தாச்சலம் ஒன்றியத்துக்குட்பட்ட அதிமுக, பாமக, பாஜக, சுயேட்சை,  திமுக உள்ளிட்ட 19 ஒன்றிய கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்,சுயேச்சை வேட்பாளரான மலர் முருகன் என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் சுயேட்சை வேட்பாளர் மலர் முருகன் 16 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றதால், விருத்தாச்சலம் ஒன்றிய சேர்மன் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் இன்று ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றிய சேர்மனாக மலர் முருகன், அவர்களுக்கே வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார். 


இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பண மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தியும் வாழ்த்து தெரிவித்தனர். விருத்தாசலம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேலுப்பிள்ளை. ஒன்றியக்குழு துணைத் தலைவர் பூங்கோதை ஒன்றிய துணை இளைஞர் அணி அமைப்பாளர் பாலு, உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/