கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் “செயல்பாட்டு ஆராய்ச்சியில் கணிதத்துறையின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கம்.
கடலூர் பெரியார் கலைக் கல்லூரி கணிதத்துறை சார்பில் இன்று “செயல்பாட்டு ஆராய்ச்சியில் கணிதத்துறையின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் சி. ஜோதி வெங்கடேசுவரன் தலைமை ஏற்று விழாவை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். துறைத்தலைவர் முனைவர் ரா. ஆனந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கணிதத்துறை இணைப் பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எம். சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். விழாவின் இறுதியில் கணிதத்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் நெ. கரோலின் எஸ்தர் சாந்தி நன்றியுரை கூறினார்.



No comments:
Post a Comment