விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.


விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம ஊராட்சி தூய்மைப் பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


தமிழ்நாடு கிராம ஊராட்சித் துறை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் மாநில சங்கம் சார்பில் மாநில செயலாளர் செல்வராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.


இந்த ஆர்ப்பாட்டத்தில் கிராம ஊராட்சி பணிபுரியும் துறை பணியாளர்கள் நடப்பு ஆண்டு வரையிலான நிலுவைத் தொகை வழங்கிடவும் சிறப்பு காலமுறை ஊதிய வழங்க உத்தரவு பிறப்பித்து பிறகும் இது வரை ஊதியம் வழங்க வில்லை, எனவே காலதாமதமின்றி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கிடவும் துறை பணியாளர்களுக்கு பஞ்சப்படி காண உத்தரவு 30% வழங்கவும் இதுவரை வழங்கப்படாத பஞ்சப்படி உடனடியாக வழங்க ஆவண செய்யவும் தூய்மை பணியாளர்களுக்கு மாதா மாதம் ஊதியம் வழங்கிடவும் தூய்மை காவலர் பணி நிரந்தரம் செய்திடவும் தூய்மை காவலர்கள் குறைந்தபட்ச மாத ஊதியம் பத்தாயிரம் வழங்கிடவும் தூய்மை காவலர்களுக்கு அடையாள அட்டை வழங்கிடவும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 


இதில் சிறப்பு அழைப்பாளர் மாநிலத் தலைவர் லட்சுமணன் முன்னிலை ரேவதி ஒன்றிய செயலாளர் சங்கர்கணேஷ் ஒன்றிய பொருளாளர் அலமேலு தூய்மை காவலர் ஒன்றிய தலைவர் ஆரமுதம் தூய்மை காவலர் ஒன்றிய செயலாளர் செல்வகுமாரி தூய்மை காவலர் பொருளாளர் மற்றும் 200க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் காவலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

*/