நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 20 May 2022

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம்

நெய்வேலி என்எல்சி நிறுவனம் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துவதை கண்டித்து கிராம மக்கள் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது!!!


கடலூர் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரம் தயாரித்து வரும் நிலையில் ஏற்கனவே சுரங்கம் A. சுரங்க B. ஆகிய பகுதிகளில் நிலக்கரி வெட்டி எடுத்து மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. இந்தநிலையில் மூன்றாவது சுரங்க விரிவாக்கத்திற்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள கரிவெட்டி, கரைமேடு, கத்தாழை, மும்முடிச்சோழகன் மேல் வளையமாதேவி கீழ் வளையமாதேவி ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை என் எல்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.


இந்த நிலையில் இன்று நெய்வேலி என்எல்சி அதிகாரிகள் கரிவெட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த வந்த அதிகாரிகளை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று திரண்டு என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். அப்போது நிலம் கையகப்படுத்து வதற்கான என்எல்சி நிறுவன அதிகாரிகளையும்   நிலம் கையகப்படுத்துவதற்கான அளவீடு செய்ய வந்த வருவாய்த் துறை அதிகாரிகளையும் முற்றுகையிட்டு கிராம பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


மேலும் ஏக்கர் ஒன்றுக்கு 30 லட்சம் வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர் இச்சம்பவம் தகவலறிந்து வந்த சேத்தியாத்தோப்பு டிஎஸ்பி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் கரிவெட்டி கிராமத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் அக்கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

No comments:

Post a Comment

*/