மின்வாரிய ஊழியர்களின் சலுகையை ரத்து செய்யக்கோரி விருத்தாசலம் பூதாமூர் துணை மின்நிலையத்தில் கூட்டம் நடைபெற்றது.
விருத்தாசலத்தில் பூதாமூர் துணை மின் நிலையத்தில் மின்வாரிய ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வை பெற்றிடவும், பகுதி நேர ஊழியர்களுக்கு நிரந்தரமாகவும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக்கூலி ரூபாய் 380 மற்றும் திறந்த நிரந்தரம் பெற்றிடவும் போராடி வெற்றி பெற்ற மின்வாரிய ஊழியர்களின் சலுகைகளை பறித்த சட்டத்தை ரத்து செய்திடவும் வலியுறுத்தி சிஐடியு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது.
இதில் மாநில பொதுச் செயலாளர் பழனிவேல் மாநில செயலாளர் காங்கேயன் மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் மாவட்ட செயலாளர் தேசிங்கு மாவட்ட பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் முடிவில் மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன் நன்றியுரை கூறினார்.

No comments:
Post a Comment