கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள மேலக்குறிச்சி கிராமத்தில் வரும் 27 ந் தேதி கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் மே 4-ந் தேதி நடைபெற்றது.
மனுக்கள் பெறும் முகாமிற்கு மேலக்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் ராணி முருகேசன் தலைமை தாங்கினார், வேப்பூர் வட்டாட்சியர் மோகன், சமூக நல வட்டாட்சியர் அந்தோணிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கற்பகம் கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார் மொத்தம் 137 மனுக்கள் பெற்று நடவடிக்கை எடுக்க கோரி துறை வாரியாக பிரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் மண்டல துணை வட்டாட்சியர் மஞ்சுளா, வட்ட வழங்கல் அலுவலர் சிவகண்டன், தேர்தல் வட்டாட்சியர் கோவிந்தன், நல்லூர் பிடிஒ சங்கர், துணை பிடிஒ, நீலாவதி, வேப்பூர் வருவாய் ஆய்வாளர் மாலா, கிராம நிர்வாக அலுவலர்கள் அருண், சுணில், பிரியா, ஹரி பிரசாத், ஊராட்சி செயலாளர் வீரமுத்து, கிராம உதவியாளர்கள் ராசாத்தி, பால கிருஷ்ணன் மணிவண்ணன், செல்வி, சிவா, முருகன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment