புவனகிரி அருகே புளியங்குடி கிராமத்தில் ஸ்ரீ நவ காளியம்மன் கோவில் 18ஆம் ஆண்டு சித்திரை மாத பூக்குழி விழா - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

புவனகிரி அருகே புளியங்குடி கிராமத்தில் ஸ்ரீ நவ காளியம்மன் கோவில் 18ஆம் ஆண்டு சித்திரை மாத பூக்குழி விழா

 

ஸ்ரீ நவ காளியம்மன் கோவில் பூக்குழி விழா பூச்சட்டி கையில் ஏந்தியும், வேல் அலகு குத்தியும் பூக்குழி இறங்கி நூற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். திரளான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே புளியங்குடி கிராமத்தில் ஸ்ரீ நவ காளியம்மன் கோவில் 18ஆம் ஆண்டு சித்திரை மாத பூக்குழி விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு முன்னதாக கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு கோவிலில் காப்பு கட்டுதல் துவங்கி ஸ்ரீ நவ காளியம்மனுக்கு தினசரி கதை பாட்டு ,சாமி ஊர்வலம், தாலாட்டு பாட்டு என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. 


இந்நிலையில் ஸ்ரீ நவ காளியம்மனுக்கு 18ஆம் ஆண்டு பூக்குழி விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் படியாக பூ கரகம் சுமந்தும் நீண்ட அலகு குத்தியும் பூக்குழியில் இறங்கி தீ மிதித்து அம்மனை வணங்கி தரிசனம் செய்தனர். அம்மன் கேட்காமலேயே துன்பங்களை நீக்கி இன்பங்களை வாரி வழங்குவார் என்ற நம்பிக்கையில் இவ்விழாவிற்கு சாக்காங்குடி,ஒரத்தூர், கண்ணங்குடி, கீழநத்தம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பூக்குழி கண்டு களித்து சாமி தரிசனம் செய்தனர்.

No comments:

Post a Comment

*/