பெட்ரோல் டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் வடலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 May 2022

பெட்ரோல் டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் வடலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !!!

 

பெட்ரோல் டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் சார்பில் வடலூர் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!


கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையத்தில் கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் பெட்ரோல் டீசல் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையை குறைக்கக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்நிகழ்வில் மக்கள் அதிகாரம் வடலூர் கிளைச் செயலாளர் ஆனந்தி அவர்கள் தலைமை வகித்தார் விடுதலை சிறுத்தை கட்சியின் வடலூர் நகர செயலாளர் தங்க ஜோதிமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.


ஐக்கிய தேசிய முன்னணியின்கடலூர் மாவட்ட அமைப்பாளர் சரவணன் மாவட்ட தலைவர் சோ. தண்டபாணி எஸ் டி பி ஐ கட்சியின் கடலூர் மேற்கு மாவட்ட தலைவர் கமாலுதீன் மாநில செயற்குழு மணியரசன் கடலூர் மக்கள் அதிகாரம் மாவட்ட இணைச்செயலாளர் மணிவாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.


கடலூர் மக்கள் அதிகாரம் ராஜேஷ்குமார் சிறப்புரை வழங்க முற்போக்கு சிந்தனையாளர் இயக்கத்தின் மாநிலப் தலைவர் பாலசுப்பிரமணியன் அவர்கள் மக்கள் அதிகார இயக்கத்தின் தமிழ்நாடு புதுவை மாநில பொதுச்செயலாளர் ராஜி அவர்கள் நன்றியுரை வழங்கினார்.


விலைவாசி உயர்வை கண்டித்து மக்கள் கலை இலக்கிய கழகத்தினர் பாடல்கள் மூலம் மக்களுக்கு எடுத்துரைத்தனர் மேலும் கூட்டத்தில் பேசுகையில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


அம்பானிக்கும் அதானிகளுக்குக்கும் வழங்கும் பல லட்சம் கோடி வரியை ரத்து செய் பெட்ரோல் டீசல் விலை உயர்வின் மூலம் பொதுமக்களிடம் வசூலித்த ரு 26 லட்சம் கோடி வரிப்பணத்தை திருப்பிக்கொடு என்று தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

*/