நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 23 May 2022

நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரமன்ற கூட்டம் நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி முன்னிலை வகித்தார். மேலும்,நகரமன்ற துணைத்தலைவர் கிரிஜா திருமாறன்,துப்புரவு அலுவலர் சக்திவேல் நகரமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

நகரமன்ற கூட்டத்தில் சொத்து வரி உயர்வு குறித்து ஒப்புதல் பெறப்பட்டு கடலூர் மண்டல செய்திகளில் வெளிவந்துள்ளதாக ஆணையர் தெரிவித்தார்.

சொத்துவரி உயர்வு குறித்த தீர்மானத்தை எதிர்த்து புனிதவதி தலைமையில் (அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.


அடுத்து பேசிய கவுன்சிலர் இக்பால் அனைத்து வார்டுகளுக்கும் எல்லை வரையரை தரவேண்டும், அனைத்து கவுன்சிலர்களுக்கும் அடையாள அட்டை தரவேண்டும் எனவும், நெல்லிக்குப்பம் நகர சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அனைத்து மருத்துவ ஊழியர்களையும் இடமாற்றம் செய்திட வேண்டும், மருத்துவ மனையில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறைகளை கட்டித்தரவேண்டும் என பேசினார்.
அடுத்து முத்தமிழ் கவுன்சிலர் பேசுகையில் எனது வார்டில் உள்ள மோரை தெருவிற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி மோரை எவரெட்புரம் தெருவிற்கு செல்வதாக தெறிவித்தார்.


மேலும்,கவுன்சிலர் பன்னீர் பேசுகையில் நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் ஊன முற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படுமா என கோரிக்கை வைத்தார்.


பதிலளித்து பேசிய கமிஷனர் பார்த்தசாரதி மாற்றுதிறனாளிகளுக்கு நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து விட்டு வாய்ப்புகள் வழங்கப்படும் என தெறிவித்தார்.

No comments:

Post a Comment

*/