விருத்தாசலம் நகர்மன்ற கூட்டத்தில் குறைகளை கொட்டித்தீர்த்த கவுன்சிலர்கள். - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 24 May 2022

விருத்தாசலம் நகர்மன்ற கூட்டத்தில் குறைகளை கொட்டித்தீர்த்த கவுன்சிலர்கள்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் நகராட்சியில்  நகர் மன்ற தலைவர் டாக்டர் சங்கவி முருகதாஸ் துணைத் தலைவர் ராணி தண்டபாணி நகராட்சி ஆணையாளர் சசிகலா ஆகியோர் தலைமையில்  கூட்டம் நடைபெற்றது.


விருத்தாசலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. வார்டுகளின் அடிப்படை தேவைகளான குடிநீர் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறை, கழிவுநீர் வாய்க்கால், புதிய மின்கம்பங்கள் அமைத்து தெருவிளக்கு அமைத்து கொடுத்தல், பொதுக்கழிப்பிடம் அமைத்தல், போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் பாலக்கரையில்  சாலையை ஆக்கிரமித்துள்ள  பிரபல துணிக்கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மணிமுக்தாற்றில் மருத்துவ கழிவுகள் கலந்து நதியின் புனிதத்தன்மையை கெடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு  கோரிக்கைகளை கவுன்சிலர்கள் முன்வைத்தனர்.


நகராட்சி முழுவதும் குரங்கு, நாய், பன்றிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாரத்திற்கு ஒருமுறையாவது கொசு மருந்து அடிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டனர்.

மேலும் ஆட்டுத்தொட்டி டெண்டர் விடுதல், நகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையத்தில் உள்ள 23 கடைகள், ஜங்சன் சாலையில் உள்ள 17 கடைகள், பெரியார் நகரில் உள்ள 10 கடைகள் உள்ளிட்ட 50கடைகளை டெண்டர் விட்டு விருத்தாசலம் நகராட்சிக்கு வருமானத்தை அதிகப்படுத்துவதற்கு  நகர்மன்ற தலைவருக்கும், நகராட்சி ஆணையாளருக்கும் தனது கருத்துக்களை கோரிக்கையாக முன்வைத்தார்.


மொத்தத்தில் விருத்தாசலம் நகராட்சியில்  அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் மந்தமாக செயல்படுவதாகவும், கோரிக்கைகளை கொட்டிக் தீர்த்தனர்.முன்னதாக அதிமுக கவுன்சிலர்கள் சொத்து வரி உயர்வை வாபஸ் பெறச் சொல்லி வெளிநடப்பு செய்தனர்.

No comments:

Post a Comment

*/