கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பணத்தை தவறவிட்ட பெண் - காவலாளிக்கு பாராட்டுக்கள் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 18 May 2022

கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் பணத்தை தவறவிட்ட பெண் - காவலாளிக்கு பாராட்டுக்கள்


கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் நேற்று காலை சுமார் 11மணியளவில் புறநோயாளியாக  சிகிச்சை பெற வந்தபெண் ஒருவர் மருத்துவமனை முன்பக்க வழியில் தனது மணிபர்ஸை தவற விட்டதாக தெறிகிறது. மேற்படி பர்ஸில் 5500.00ரூபாய் மற்றும் வீட்டின் சாவி  இருந்ததாக தெறிகிறது. காணாமல் போய் சுமார் 1மணி நேரம் கழித்து அழுது புலம்பி  தேடி வந்திருக்கிறார்.


ஆனால் அதற்கு முன்னர் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணி புரியும் நெல்லிக்குப்பத்தை அடுத்த பல்லவராயநத்தம் பகுதியைச்  காவலாளி கணேசன்(52) என்பவர் கீழே மணி பர்சை எடுத்து யாருடையது எனறு தேடி வந்திருக்கிறார் மேற்படி பெண்ணின் அழுகுரல் கேட்டு என்ன ஏது என விசாரித்துள்ளார்.அப்பெண்மணி நடந்த விஷயத்தை கூறி பணம்,சாவி, இருந்ததை தெறிவித்து உள்ளதாக தெறிகிறது.


பின்னர் உண்மைத்தன்மையை புரிந்து கொண்ட மருத்துவமனைை காவலாளி அப்பெண்ணின் பர்ஸை கொடுத்தார்  பின்னர் அப்பெண்ணிடம் பொது இடங்களில் கவனமாக இருக்குமாறு அறிவுருத்தினார். இதை அங்கே பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள் காவலாளி கணேசனை மனதார பாராட்டினார்கள்.

No comments:

Post a Comment

*/