சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம்: தீட்சிதர்கள் பக்தர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும் - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபை விவகாரம்: தீட்சிதர்கள் பக்தர்களுடன் இணக்கமாக இருக்க வேண்டும்

சிதம்பரம் நடராஜர் கோவில் கனகசபையில் பக்தர்களை அனுமதித்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று தீட்சிதர்கள் தெரிவித்த கருத்து தவறானது வேதனைக்குரியது.


தங்களது போக்கை மாற்றிக் கொண்டு பக்தர்களோடு இணக்கமாக இருக்கவேண்டும் என்று கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவர் ஜெமினி எம்.என் ராதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வரும் பக்தர்களை சிற்றம்பல மேடையில் ஏறி (கனகசபை)சாமி தரிசனம் செய்து வரும் முறை தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வரும் வழக்கம் ஆனால் சிற்றம்பல மேடையில் ஏறி வழிபட விடாமல் பக்தர்களை ஒருசில தீட்சிதர்கள் தடுத்து தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து கீழே தள்ளிய காரணத்தால் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.


இதுகுறித்து சிதம்பரம் கோட்டாட்சியர் பலமுறை தீட்சிதர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்தவித முடிவும் எட்டப்படவில்லை.


இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்தேன்.

டபிள்யு.பி.9447/2022 வழக்கில் 20 4 2022 சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் படி கோவிட்-19 முன்பு நடைமுறைபடி

 கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கி அரசு ஆணை பிறப்பித்தது.

ஆனால் வேண்டும் என்றே

 அரசுஅரசாணை பிறப்பதற்கு முன்பு பொது தீட்சிதர்களிடம் எந்தவித கருத்தும் கேட்கவில்லை என்று அவர்கள் பொய்யான தகவலை கூறுகின்றனர். அரசாணையை உடனடியாக செயல்படுத்த வந்த கடலூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் எங்களை எச்சரித்தார் என்றும் போலீஸ் அதிகாரிகள் எங்களது ஆட்சேபனைகளை மீறி கனகசபை மேல் ஏறிச் சென்று பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து உள்ளார்கள் என்று மாவட்ட கூடுதல் கலெக்டர், காவல்துறையினரையும் தீட்சிதர்கள் குறைகூறுவது

 வேதனைக்குரியது


சபாநாயகர் கோயில் (நடராஜர்) மக்களுக்கு சொந்தமான பொதுவான கோயில்.


சிதம்பரம் நடராஜர் கோயிலை தீட்சிதர் தான் கட்டினார்கள் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை பொது தீட்சிதர்களால் முறைகேடுகள் நடந்தால் இந்து சமயஅறநிலை துறை விசாரித்து கோவில் நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கலாம் அல்லது எந்த நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


கடவுளை வழிபட உரிமை கோரி நீதிமன்றத்திற்கு செல்பவர்களை தான் பார்த்து இருக்கின்றோம் ஆனால் கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்யவதற்கு அரசாணை வெளியிட்ட தமிழக அரசை எதிர்த்து உச்ச நீதி மன்றம் செல்வோம் என்று பொது தீட்சிதர்கள் கூறும் கருத்து ஏற்புடையதல்ல 


எனவே பக்தர்களின் நலன் கருதி தீட்சிதர்கள் தங்களது செயல்பாட்டை மாற்றிக் கொண்டு பொது மக்களோடு நல்லிணக்கம் காட்ட வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

*/