கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட இரண்டாவது வார்டு வகார மாறி இரண்டாவது வார்டில் சாக்கடை கழிவுநீர் செல்ல டிரைனேஜ் களில் பாலிதீன் பேப்பர் மற்றும் வீட்டில் உள்ள உபயோகமில்லாத பொருட்களை பொதுமக்கள் பேனர்களில் கொட்டி இருந்ததால் சாக்கடை நீர் மற்றும் கழிவுநீர் தேங்கி நின்றதால் இரண்டாவது வார்டு கவுன்சிலர் வசந்தா ரவி இன்று ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியை தொடங்கினார்.
இதனையடுத்து வழிகளில் உள்ள கருவேல மரங்களை அகற்றியதோடு இரண்டாவது வார்டில் இருந்து புளியங்குடி வரை இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருவதால் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மின் விளக்கு அமைத்து தருவதாக பேரூராட்சி மன்ற தலைவர் செல்வி ஆனந்தன் உறுதியளித்தார் இதனை தொடர்ந்து பொதுமக்கள் பயன்படும் வகையில் குடிநீர் மற்றும் சாலை வசதிகள் சரியாக உள்ளதாக ஆய்வு செய்தனர்
செய்தியாளர்; சண்முகம்

No comments:
Post a Comment