புவனகிரி அருகே மருதூர் வள்ளலார் ஆலயத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குரங்கு திடீரென்று மயங்கி கீழே விழுந்தது பொதுமக்கள் குரங்குக்கு சிகிச்சை அளித்தனர் !!! - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 22 May 2022

புவனகிரி அருகே மருதூர் வள்ளலார் ஆலயத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குரங்கு திடீரென்று மயங்கி கீழே விழுந்தது பொதுமக்கள் குரங்குக்கு சிகிச்சை அளித்தனர் !!!

புவனகிரி அருகே மருதூர் வள்ளலார் ஆலயத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க பெண் குரங்கு திடீரென்று மயங்கி கீழே விழுந்தது பொதுமக்கள்  குரங்குக்கு சிகிச்சை அளித்தனர் !!!


கடலூர் மாவட்டம்,  புவனகிரி வட்டம் மருதூர் என்னும் சிற்றூரில் திருஅருட்பிரகாச வள்ளலார் அவதரித்த இல்லம் உள்ளது. இத்திருக்கோயிலில் இருபதிற்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன ஆலயத்துக்கு வரும் பக்தர்களிடம் குரங்குகள் இயல்பாக பழகி வந்த நிலையில் இன்று மாலை இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குரங்கு ஒன்று கோவிலின் வளாகத்தில் உள்ள மதில் சுவரில் இருந்து திடீரென்று மயங்கி கீழே விழுந்தது.


இதைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் திரளாக குரங்குக்கு ஆர்வமுடன் தீவிர முதலுதவி சிகிச்சை அளித்தனர் மேலும் குரங்கிற்கு சத்து கலந்த குளுக்கோஸ் குடிநீர் மற்றும் போர்வை போன்ற பொருள் உதவிகளை குரங்கிற்கு பொதுமக்கள் உதவினர் மேலும் இது தொடர்பாக சிதம்பரம் வனத்துறை அலுவலரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறை காவலர் திரு புஷ்பராஜ் பாதிக்கப்பட்ட குரங்கை நேரில் வந்து பார்வையிட்டு புவனகிரி கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்றார்.


மனிதர்களிடம் இயல்பாக பழகி வந்த குரங்கிற்கு உடல்நலம் சரியில்லாத நிலையை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


No comments:

Post a Comment

*/