காட்டுமன்னார்கோவில் அருகே சிபிஎம் கட்சி கொடிக்கம்பம் வெட்டி வாய்க்காலில் வீசிய மர்ம நபர்கள்.
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குமராட்சி காவல் சரகத்திற்கு உட்பட்ட திருநாரையூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடந்த மே 1 தொழிலாளர் தினத்தன்று கட்சி கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை கட்சி கொடியை சமூக விரோதிகள் மர்மநபர்கள் யாரோ கட்சி கொடியை அடியோடு வெட்டி அருகில் இருக்கும் விஷயங்கள் ஓடையில் வாய்க்காலில் வீசி சென்றுள்ளனர் தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் குமராட்சி ஒன்றிய செயலாளர் மூர்த்தி மற்றும் ஒன்று திரண்டனர் பின்பு குமராட்சி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் அமுதா மற்றும் காவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள் எடுத்து அந்த கொடிக்கம்பம் மீண்டும் அதே இடத்தில் நடைபெற்றது இது சம்பந்தமாக குமராட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கொடி கம்பம் அடியோடு வெட்டி சாய்க்கப்பட்டு வாய்க்காலில் நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது
செய்தியாளர்:கே,பாலமுருகன்


No comments:
Post a Comment