வேப்பூர் அருகே லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து - டிரைவர் பலி - தமிழக குரல்™ - கடலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 May 2022

வேப்பூர் அருகே லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து - டிரைவர் பலி

சேப்பாக்கம் பெட்ரோல் பங்க் அருகே முன்னால் சென்ற லாரி மீது பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி விபத்து டிரைவர் இறந்தார்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் புதிய பெட்ரோல் பங்க் எதிரே லாரியின் பின்புறம் கன்டெய்னர் லாரி மோதியதில் அதன் டிரைவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.


சென்னை புழல் பகுதி,புனித அந்தோணியார் முதல் குறுக்கு தெருவை சேர்ந்த பால்ராஜ் மகன் வேலுச்சாமி (வயது 58) என்பவர் டிஎண், 45, பிஜெ, 2891 என்ற எண்ணுள்ள கன்டெய்னர் லாரியில், செங்கல்பட்டிலிருந்து கொக்க கோலா கூல் டிரிங்ஸ் எற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார்.


கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகேயுள்ள சேப்பாக்கம் புது பெட்ரோல் பங்க் எதிரே சென்ற போது, முன்னால் சென்று கொண்டிருந்த டிஎண், 30, பிஎல்,7399 என்ற எண்ணுள்ள இரும்பு கம்பி ஏற்றி கொண்டு முன்னால் சென்று கொண்டிருந்த லாரி அஜாக்கிரதையாகவும், இன்டிகேட்டர் போடாமலும்,திடீரென்று வேகத்தை குறைத்ததால் பின்னால் சென்ற கன்டெய்னர் லாரி முன்னால் கம்பி ஏற்றி சென்ற லாரி மீது பலமாக மோதியது.


இதில் கன்டெய்னர் லாரி ஓட்டுனர் வேலுச்சாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார், இது குறித்து தகவலறிந்த வேப்பூர் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த டிரைவர் வேலுச்சாமி உடலை பிரேத பரிசோதனைகாக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிந்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

*/