கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி ஊராட்சியில் வானதிராயன்பட்டி மற்றும் கீழவன்னியர் தெரு இறக்கம் அண்ணாநகர் பகுதிகளில் சுமார் 30 குடும்பங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறார்கள் இவர்கள் ஊராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி ரசீது மின் இணைப்பு குடிநீர் ரசீது உள்பட அனைத்து வரி ரசிதுகளும் கட்டி வருகிறார்கள் மேலும் மின் இணைப்பு உடன் வசித்து வருகிறார்கள்.
மேலும் தற்பொழுது சாலை விரிவாக்கப் பணிக்காக மேற்கண்ட குடும்பங்களை அரசு அப்புறப்படுத்த முயற்சி செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது இது சம்பந்தமாக கடந்த மே மாதம் ஆறாம் தேதி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் இடம் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தனர்.
உடனடியாக அப்பகுதி மக்கள் அழைத்துக்கொண்டு காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் வேணி அவர்களிடத்தில் மனு கொடுத்தார்
அந்த மனுவில் சாலை விரிவாக்கத்திற்கு இடத்தை எடுத்துக்கொண்டு மீதி உள்ள இடத்தை எங்கள் குமராட்சி ஊராட்சியில் உள்ள பொது மக்களுக்கு அரசு மனைப்பட்டா வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இது சம்பந்தமாக கடந்த மே 1ஆம் தேதி தொழிலாளர் தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது, அதில் ஊராட்சிக்கு உட்பட்ட கீழ வன்னியூர் கிராமத்தில் அரசு கலைக்கல்லூரி அமைவதையடுத்து கீழவன்னியூர் கிராமத்தில் மெயின் ரோட்டில் வசித்து வரும் குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் எனவும் வாணாதிராயன் பேட்டையில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கு மாறும் குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்டவர்கள் வீட்டுமனை பட்டா இல்லாமல் நீர்நிலை மற்றும் சாலை ஓரம் உள்ள புறம்போக்குகளிள் வசிக்கும் குடும்பங்களுக்கு அதில் பட்டா வழங்க வேண்டுமெனவும் மாற்று ஊராட்சியில் இருந்துவரும் குடும்பங்களுக்கு இலவச பட்டா வழங்கக்கூடாது எனவும் கிராமசபை கூட்டத்தில் பொதுமக்கள் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
எனவே குமராட்சி ஊராட்சி உட்பட்டவர்கள் மட்டும் வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டுமென வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் ஊராட்சி மன்ற தலைவர் கே ஆர் ஜி தமிழ்வாணன் உடன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
செய்தியாளர்:கே, பாலமுருகன்

No comments:
Post a Comment