கடலூர் மாவட்டம், வேப்பூர் காட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வேல்முருகன் என்பவர் தனக்கு சொந்தமான டிஎண், 31, பி எக்ஸ், 3146 என்ற எண்ணுள்ள பஜாஜ் டிஸ்கவர் வாகனத்தில் தனது அக்கா லட்சுமி, மற்றும் அவரது பாட்டி ஆகியோரை அழைத்துக்கொண்டு திருச்சி சென்னை சர்விஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த டிஎண் 32, என்,3758 என்ற எண்ணுள்ள அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது
இதில் வேல்முருகனும், அவரது பாட்டியும் காயமடைந்தனர் இருவரும் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைகாக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment